கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள்- இலங்கை தூதரகம்- குவைத்

புதிய கடவுச்சீட்டைப் பெற 2020 ஜனவரி 01 தொடக்கம் 2020 செப்டம்பர் 24 வரை விண்ணப்பித்தவர்கள் கடவுச்சீட்டு இலக்கங்களை வௌியிட்டுள்ள குவைத்துக்கான இலங்கைத் தூதரகம் வருகைத் தருவதற்கான விபரங்களை வழங்கியுள்ளது.

கடவுச்சீட்டுகளை வார நாட்களில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ளலாம் . கடவுச்சீட்டைப் பெற மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , தற்போது பாவனையிலுள்ள கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் . அத்தோடு தற்காலிக கடவுச்சீட்டொன்று உங்கள் வசம் இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .

பிள்ளைகளின் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள வருகை தரும் தாய் அல்லது தந்தை , தனது கடவுச்சீட்டை எடுத்து வருவதோடு மஞ்சள் நிற பற்றுச்சீட்டு , குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வருவது அவசியமாகும் .

அத்தோடு தற்போது பிள்ளையிடம் தற்காலிக அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று இருப்பின் அதனையும் எடுத்து வருவது அவசியமாகும் .
கடவுச்சீட்டுகள் அதன் உரிமையாளர்களிடம் மட்டுமே கையளிக்கப்படும் என்பதனை தயவு கூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435