விமான பயணத்திற்கான கடவுச்சீட்டு தொடர்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலமை குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்ஹ விளக்கமளித்துள்ளார்.
சில நாடுகளுக்கான சர்வதேச கடவுச்சீட்டு கையிருப்பு இல்லாமை குறித்தே திணைக்களம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டில் சர்வதேச கடவுச்சீட்டுக்கான முத்திரை இடப்பட்டு சர்வதேச கடவுச்சீட்டாக விநியோகிக்க்பபடுகின்றது.
இவ்வாறான கடவுச்சீட்டுக்களை குறிப்பிட்ட சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுக்கும், தூதரகங்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் குறித்த கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்ளும் என்பதினால் சர்வதேச கடவுச்சீட்டுத்தொடர்பில் எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று மேலும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேநேரம், குறித்த விடயம் பிரச்சினைக்குரியது அல்ல உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளுக்குமான முத்திரையுடன் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்கு அங்கீகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.