கட்டாரின் தொழில் சட்டம் குறித்த மற்றுமொரு தகவல்

கட்டாரின் தொழில் சட்டம் குறித்த மற்றுமொரு தகவல

சேவை முகவர் நிறுவனத்தினர், நபர் ஆகியோரினால், வெளிநாடு செல்லும் பணியாளர் ஒருவரின் பயண அனுமதிப்பத்திரம், அடையாள அட்டை என்பனவற்றை தம்வசம் வைத்திருப்பது, கட்டார் நாட்டின் தொழில் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு எதிரான சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதாக கட்டார் அறிவித்துள்ளது.

கட்டார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால், அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விசேட அறிவித்தல் வெளியிட்பட்டுள்ளது.

நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரம் தொடர்பான அமைச்சிற்கும் இது குறித்து பணியாளர்கள் முறைப்பாடுகளை செய்யலாம் என்றும் கட்டார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கட்டார் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்தப் பிரச்சினை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலந்துரையாடலில் இந்தியா, இலங்கை, ப்லிப்பைன்ஸ், பாகிஸ்தான், நேபாளம் உட்பட கட்டாரில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

எவராவது ஒரு வெளிநாட்டவரின் அந்த நாட்டின் அடையாள அட்டை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காணாமல்போகுமாயன், உடனடியாக செயற்படக்கூடிய வழிமுறை குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

குறித்த நபர் காணாமல்போன அடையாள அட்டைக்காக அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளதுடன், அதனை 500 கட்டார் ரியால் தண்டப்பணத்தை செலுத்தி, புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435