சவுதியில் சம்பளமின்றி அவதியுறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

சவுதி அரேபியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வழங்கப்படாத சம்பளத்திற்காக பல மாதங்கள் காத்திருந்த பாகிஸ்தான் கட்டிட நிர்மாணத் தொழிலாளர்கள் வெறுங்கையுடன் சொந்த நாட்டுக்கு செல்லவுள்ளனர் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் தூதரகத்தின் நலன்புரி மைய அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில் சுமார் 405 பாகிஸ்தான் தொழிலார்கள் எதிர்வரும் 7 ஆம் திகதியளவில் நாடு திரும்புவர் என்று கூறியுள்ளார்.

கடந்த 8, 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் அல்லலுற்றிருந்த சுமார் 6500 பேரில் ஒரு பகுதியினரே இப்பாகிஸ்தானியர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்..

மேலும் பிலிப்பைன், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாடு திரும்ப எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் சுவதி ஓகர் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஆவர். இந்நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 30,000 பேர் சம்பளம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே 275 பாகிஸ்தானியர்கள் கடந்த மாதம் நாடு திரும்பியுள்ளனர். மேலும் தங்கியுள்ள ஊழியர்களின் உணவு, நீர் மற்றும் தங்குமிட வசதிகளுக்காக சவுதி அரசாங்கம் 100 மில்லியன் ரியால் (27 மில்லியன் அமெரிக்க டொலர்) ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435