கட்டாரில் நெருக்கடி: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சர்

வளைகுடா நாடுகள் கட்டாருடனான உறவுகளை முறித்துள்ளதால், அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் இலங்கைக்கு நேரடி பாதிப்புகள் எதுவும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா உட்பட 4 நாடுகள் கட்டார் இராச்சியத்துடனான இராஜதந்திர தொடர்பினை துண்டிப்பதாக அறிவித்திருந்தன.

இந்த நிலையில், குறித்த நெருக்கடி நிலையினால், தமது பிரஜைகளுக்கோ அல்லது அங்கு தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென கட்டார் அறிவித்துள்ளது.

கட்டாரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் தொழில்புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டார் நிலவரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க,

இது அந்தப்பிராந்தியத்தில் உள்ள அரசியல் பிரச்சினையாக உருவாகியுள்ளது.

எனவே, எம்மைப் போன்ற நாட்டுடனான தொடர்பில் இது பாதிப்பை ஏற்படுத்தாது.

இலங்கை மக்கள், இது தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435