UAE யில் தூசுடன் கூடிய காலநிலை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் தினங்களில் கடுமையான காற்று வீசுவதுன் தூசு பரவும் சாத்தியங்கள் இருப்பதனால் கவனமாக இருக்குமாறு அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

வாய் மற்றும் கண்களை பாதுகாக்கும் வகையில் அணியுமாறு எச்சரித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம், இந்நிலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்றை தினம் (05) மலைபாங்கான பகுதிகளில் வெப்பநிலை 19 -29 செல்சியஸ் வரை காணப்படும் என்றும் கரையோர பிரதேசங்களில் வட மேற்காக மணிக்கு 40 – 45 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பாக புஜய்ரா தொடக்கம் அபுதாபியின் அல் ருவைஸ் வரையான கரையோர பிரசேதங்களில் இந்நிலை காணப்படும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

நாளை (06) காலநிலை மேக மூட்டத்துடன் காணப்படும் சாத்தியம் காணப்படுவதனால் வீதிகள் தெளிவாக தெரியாதிருக்க வாய்ப்புகள் காணப்படுவதாகவும் இந்நிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் என்பதனால் மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

நாளைமறுநாள் (07) மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வெள்ளிக்கிழமை அதிகாலையளவில் இந்நிலை அதிகமாக காணப்படும் என்றும் இந்நிலை 90 விதமான கரையோர பிரதேசங்களிலும் 75 வீதமான மலைப்பிரதேசங்களிலும் காணப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளைமறுநாள் அதிகாலையில் மூடுபனி நிலையும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அராபிய வலைகுடா மற்றும் ஓமான் கடற்பரப்பில் பிற்பகலில் அலைகள் கடுமையாக காணப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

தூசு காலநிலையில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • வெளியில் உடற்பயிற்சிகளை செய்வதை தவிருங்கள். கதவு யன்னல்களை எப்போதும் மூடியே வையுங்கள்.
  • முகமூடியை பயன்படுத்தி கண் மற்றும் வாயை பாதுகாப்பாக மூடிக்கொள்ளுங்கள்.
  • தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியில் செல்ல தேவையேற்பட்டால் ஈரமான துணியை கொண்டு மூடிச் செல்லுங்கள். அதிகமான தூசியை உள்ளீர்ப்பது குறையும்.
  • வாகனத்தில் செல்லும் போது அனைத்து யன்னல்களையும் மூடி குளிரூட்டியை பயன்படுத்தவும்.
  • கண் எரிச்சல் ஏற்படுமாயின் தூய்மையான நீரில் கண்களை வைத்து கழுவுங்கள், கண் வில்லைகள் பயன்படுத்தப்படுமாயின் கூடுதல் கவனம் எடுங்கள்.
  • உடல் வரட்சியை போக்க எப்போது குடிநீரை உடன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435