கட்டாரில் பணியாற்றும் வௌிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மார்ச் மாதம் 12,13ம் திகதிகளில் நூற்றுக்கணக்கான வௌிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என 23 பேர் நேபாள பிரஜைகள் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை சனநெருக்கடியுடன் காணப்படுவதாகவும் தினமும் பாண் ஒரு துண்டு மாத்திரமே உணவாக வழங்கப்படுவதாகவும் பல நாட்கள் அனைவரும் ஒன்றாக உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நேபாள பிரஜைகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய சம்பளம் மற்றும் சேவை நலன்கள் எதுவும் வழங்காமல் நாடு கடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குற்றச்சாட்டை கட்டார் அரச கடுமையாக எதிர்த்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
வேலைத்தளம்