கட்டாரில் கொலைசெய்யப்பட்ட தாய், தந்தை, மகளின் சடலங்கள் நாட்டுக்கு

கட்டாரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கட்டாரில் கொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருடைய சடலங்கள் இன்று (07) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய சுகாதாரப்பிரிவு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

களனி, பியகம வீதியைச் சேர்ந்த தந்தை (59), தாய் (55) மற்றும் மகள் (34) ஆகியோர் இவ்வாறு கட்டாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூவரும் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என சடலங்களுடன் அனுப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 3 சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த ஒருவரே அவர்கள் மூவரையும், கொலை செய்துள்ளதாகவும், தனிப்பட்ட முரண்பாடே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி குறித்த மூன்று பேரையும் கொலை செய்த கண்டியை சேர்ந்த நபர், அதற்கு அடுத்த நாள் இலங்கைக்கு தப்பிவந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த மூன்று பேரின் சடலங்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விமானத்தில் இயற்கையான முறையில் கட்டாரில் உயிரிழந்த மேலும் சில இலங்கையர்களின் சடலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435