கடந்த எட்டாம் திகதி தொடக்கம் கட்டார் காலநிலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறும் அந்நாட்டு வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பனிமூட்ட அபாயம் காணப்படுவதாகவும் இதனால் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் கவனயீனமாக வாகனம் ஓட்டுவதனால் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்றும் எச்சரித்துள்ள வானிலை அவதான நிலையம், ஒருவரின் கவனயீனம் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டாரின் அல் ஜமாய்லியா, டுரயனியா, அல் பட்னா, துக்கான் ஆகிய பிரசேதங்களில் வீதிகளில் பனி மூட்டம் காணப்படுவதாகவும், ஏனைய பிரதேசங்களிலும் இந்நிலை காணப்படும் என்றும் இதனை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.