கட்டார் சுத்திகரிப்பு பணியாளர்களுக்கான விசேட திட்டம்

கட்டாரில் பணியாற்றும் சுத்திகரிப்பு பணியாளர்களுக்கு நிழற்குழையுடன் கூடிய தள்ளுவண்டிகளை அந்நாட்டு நகரசபை மற்றும் சுற்றாடல் அமைச்சு வழங்கியுள்ளது.

நேரடி சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சுத்திகரிப்பு பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே அவ்வமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கட்டாரைத் தளமாக கொண்டு வெளியாகும் வெல்கம் கட்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டாரின் அனைத்து பாகங்களிலும் நிழற்குடையுடன் கூடிய குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் தற்போது பகிரும் நடவடிக்கையை அமைச்சு ஆரம்பித்துள்ளது.

கோடைக்கால வெயிலில் இருந்த வெளிப்புற சூழலில் பணியாற்றும் பணியாளர்களின் நலன்கருதி மேலும் பல திட்டங்களை கட்டார் நகரசபை மற்றும் சுற்றாடல் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

குளிர்ச்சியை தரக்கூடிய தலைக்கவசங்களை வழங்குதலும் அதன் ஒரு அங்கமாகும்.

கடந்த 2015ம் ஆண்டு பணியாளர்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பஸ்களுக்கு குளீரூட்டுவது கட்டாயமாக்கப்பட்டது, அதன் பின்னர் கோடைக்காலத்தில் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தற்போது புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் வெளிப்புற பணியாளர்களின் நன்மைகருதி மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதிக சூடு காரணமாக வெளிப்புற சூழலில் பணியாற்றும் பணியாளர்கள் வலிப்பு போன்ற சுகயீனங்களுக்குட்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக நடுப்பகலில் வேலை செய்பவர்கள் இப்பாதிப்புக்குள்ளாவதாகவும் அடுத்த மாதம் தொடக்கம் மத்தியான நேர வேலை தடை செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டாரில் தற்போது பகல் நேர வெப்பநிலை 40 செல்சியஸாக இருந்த போதிலும் ஜூன் மாதம் 15ம் திகதி வரை மத்தியான நேர வேலை செய்யவேண்டியது கட்டாயமாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435