கட்டார் புலம்பெயர் தொழிலாளருக்கு சொகுசு தங்குமிட வசதிகள்!

கட்டார் நிறுவனங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிறந்த தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கட்டார் அரசாங்க அனுசரனையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டத்தினூடாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சொகுசு தங்குமிட வசதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் இதனூடாக சுமார் 32,000 புலம்பெயர் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர் என்றும் கட்டார் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர் உட்பட அனைவரும் சிறந்த வாழ்க்கைத்தரத்துடன் வசிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள கட்டார் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களின் வசதி கருதி பல்வேறு திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டத்தின் பணிப்பாளர்களின் ஒருவரான டொக்டர் ஷோன் கஷின் கருத்து தெரிவிக்கையில், தொழிலாளர் முகாம்கள், வரிசை வீ்ட்டுத் திட்டங்கள், கூடாரங்கள் வகையான இருப்பிடங்களை அமைப்பதற்கான திட்டமாக இது இருக்கப் போவதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் கட்டார் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளினால் தொழிலாளர்கள் திருப்தியடைகின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், புலம்பெயர் தொழிலாளர் எதிர்நோக்கும் தங்குமிடம் தொடர்பான சவாலை வெற்றிக்கொள்ள இத்திட்டம் உதவும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் இத்திட்டத்தினூடாக தொழிலாளர்களுக்கு நீண்டகால தங்குமிட வசதி, சுகாதார நன்மைகள் என்பனவும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் சொகுசான தங்குமிட வசதியுடன் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட சூழலை பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435