வௌிநாடு செல்ல இனி ஆங்கில அறிவு கட்டாயம்

எதிர்வரும் 2018ம் ஆண்டு தொடக்கம் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோருக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பல பெண்கள் இன்னமும் பொய்யான குடும்ப பின்னணி அறிக்கை வழங்கி வௌிநாடு செல்ல முயற்சிக்கின்றனர். குடும்பத்தின் மீது அக்கறையுடையவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். அண்மையில் தனது சிறுநீரகத்தை எடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்பிய பெண் மீண்டும் வௌிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.

எம்மால் ஓரளவுக்குதான் கட்டுப்பாடுகளை கொண்டு வரமுடியும். ஏனையவற்றை வீட்டார்களே தீர்த்துக்கொள்ள வேண்டும்

வீட்டுப்பணிப்பெண்களுக்கான பயிற்சியை நாம் தற்போது மாற்றியுள்ளோம். 21 நாள் பயிற்சி தற்போது 40 நாள் பயிற்சியாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளினதும் சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் சுத்தம் தொடர்பான விடயங்களும் பயிற்சியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435