கட்டார் வாழ் புலம்பெயர் தொழிலாளர் கவனத்திற்கு

கட்டார் வாழ் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அந்நாட்டு அரசனால் வழங்கப்பட்டுள்ள தங்குவதற்கான அனுமதிப்பத்திரத்தை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ள இச்சட்டம் தொடர்பில் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அதன் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளது.

இச்சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 10,000 கட்டார் ரியால் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரச அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் அந்நாட்டில் தங்கி பணியாற்ற அனுமதித்து அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ள ஒரேயொரு உத்தியோகப்பூர்வ ஆவணம் இதுவென்பதால் எப்போதும் கையில் வைத்திருப்பது பாதுகாப்பானது.කටාර් අභ්‍යන්තර කටයුතු අමාත්‍යාංශය විසින් ඔවුන්ගේ නිල ෆේස්බුක් පිටුව හරහා එරට වෙසෙන සියළු වැසියන්ට වැදගත් නව නිතියක් පිළිබඳව නිවේදනයක් නිකුත් කර තිබේ.

பணிபுரிவதற்கான அனுமதி காலம் நிறைவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் என்பவற்றை கண்டறிய சந்தேகத்துக்குரியவர்களை கட்டார் பொலிஸார் திடீரென சோதனையிடுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய ஆவணம் கையில் இல்லாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். அடையாளத்தை உறுதிப்படுத்தும் வரையில் சிறைத்தண்டனை அனுபவிப்பதுடன் உரிய ஆவணத்தை சமர்ப்பிக்கத் தவறினால் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

எந்நேரமும் நீங்கள் பரிசோதிக்கப்படுவீர்கள் (குற்றவாளியாக இல்லாவிட்டாலும்) என்பதனால் எப்போதும் உங்கள் அனுமதிபத்திரத்தை அருகில் வைத்திருப்பது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.

எனவே, நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தும் சட்டங்களை அறிந்து வைத்திருப்பதுடன் அதனை உரிய முறையில் பின்பற்றுவது உங்களுக்கு நன்மை பயக்கும் என்பதை மறவாதீர்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435