கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு நடவடிக்கைகளின் தாமதத்தை குறைத்து, பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தின் சேவைகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க குறுகிய மத்திய மற்றும் நீண்டகால திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, குடிவருவு மற்றும் குடியகழ்வு பணிகளை துரிதப்படுத்த தமது அமைச்சின்கீழ் உள்ள விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனங்களடமிருந்து தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கும், இலங்கை சுங்கத்தின் உயர்மட்ட முகாமைத்துவத்துக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.