கத்தாரில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் நேரங்களில் மாற்றம்

வளைகுடா நாடான கத்தாரில் கோடைகாலத்தில் திறந்தவெளி பணியிடங்களில் தடைசெய்யப்பட்ட நேரத்தை நீடிக்க நிர்வாக அபிவிருத்திஇ தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சின் அமைச்சரவை முடிவுக்கு கத்தார் அமைச்சரவை இன்று (21.10.2020) அனுமதி வழங்கியுள்ளது.

அமிரி திவானில் இன்று நடைபெற்ற அமைச்சரவையின் வழக்கமான கூட்டத்திற்கு பிரதமரும் உள்துறை அமைச்சருமான எச்.இ.ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி தலைமை தாங்கினார்.

ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் செப்டம்பர் 15 வரை சூரியனின் கீழ் அல்லது திறந்த பணியிடங்களில் செய்யப்படும் வேலைகளுக்கான வேலை நேரத்தை மட்டுப்படுத்தவும்இ காலை 10 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை வேலை தடைசெய்யவும் முடிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அதிக உஷ்ணம் காரணமாக கத்தாரில் ஜுன் மாதம் 15ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 திகதி வரை காலை 11.30 முதல் நன்பகல் 3.00 மணி வரை பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது கத்தாரில் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடைக் காலத்தை செம்டம்பர் மாதம் 15ம் திகதி வரையும்இ நேரத்தை காலை 10.00 முதல்இ 3:30 மணி வரை என்பதாக தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி திறந்த வெளியில் பணிபுரிபவர்கள் எதிர்வரும் ஆண்டு முதல் பகல் வேளையில் மேலதிகமாக 2 மணி நேரங்களைப் ஓய்வாகப் பெறுவார்கள் என்பதாக அமைச்சரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : கத்தார் தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435