கத்தார் விமான நிலையத்தில் நுழையும், வெளியேறும்போது எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்?

கத்தார் விமான நிலையத்தில் நுழையும் அல்லது வெளியேறும் ஒவ்வொரு நபரும், 50000 ஆயிரம் கத்தார் றியால்கள் (2,535,436 இலங்கை ரூபா) பெறுமதியான பணம், தங்கம், மாணிக்க கற்கள் அல்லது ஏனைய உலோகங்களை வைத்திருந்தால் பதிவு செய்தல் அவசியம் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் சுங்க பொது அதிகார சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இது பற்றி தெரியவருவதாவது, ‘பொய்யான அறிவிப்பு, அல்லது சுங்க அதிகாரிகளுக்கு கூடுதல் தகவல்களை வழங்க மறுப்பது சிறைத்தண்டனை அல்லது அபராதம் மற்றும் அத்தகைய நிதியைக் கைப்பற்றுவது போன்ற அபராதங்களுக்கு நீங்கள் உட்படக் கூடும்.’ என்பதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு 50000 றியால் பெறுமதிக்கு நிகரான பொருட்களை அல்லது பணத்தை வைத்திருப்பவர்கள் விமான நிலையத்தில் அமைந்துள்ள சுங்க பொது அதிகார சபை அதிகாரிகளிடம் உரிய தகவல்களை வழங்கி பதிவு செய்துகொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், நாணயங்களை ஏற்றுமதி செய்யும் போது அல்லது இறக்குமதி செய்யும் போது கத்தார் மத்திய வங்கியிடமிருந்து முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலாப நோக்கற்ற நிறுவனம், தொண்டு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களையும் அனுப்பும் போது, தொண்டு நடவடிக்கைகளுக்கான முன் அனுமதியை சுங்க பொது அதிகார சபையிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் : கத்தார் தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435