மோட்டார் வாகனத்திற்கும் நடக்கும் விடையங்களை வௌியில் இருந்தே கண்டறியும் வகையிலான இலத்திரனியல் கருவியை பயன்படுத்த ஐக்கிய அரபு இராச்சிய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கொம் ஐயொட் தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியை பொலிஸ் அதிகாரியின் வாகனத்தில் பொருத்துவதனூடாக மோட்டார் வாகனத்திற்குள் உள்ள சாரதி என்ன செய்கிறார் என்று கண்டறியப்படவுள்ளது.
இத்தொழில்நுட்பத்தை வீதி போக்குவரத்துப் பாதுகாப்புக்கு பயன்படுத்தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டுபாய் பொலிஸார் மற்றும் கொம் ஐயொட் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
வாகனத்தை ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தல், சாப்பிடுதல் மற்றும் குடித்தல் போன்ற செயற்பாடுகளினூடாக வீதி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை கண்டறியும் நோக்கிலேயே இப்புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.