எதிர்வரும் 29ஆம் திகதியன்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அனைத்துச் சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு 10, ஆனந்த ராஜகருணா மாவத்தையில் இதுவரை இயங்கிய குடிவரவு குடியகல்வு திணைக்களமானது எதிர்வரும் 29 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள சுஹுருபாயவிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளமையினால் அன்றைய தினம் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் சேவை, வீஸா விநியோகம், கடவுச்சீட்டில் மாற்றங்கள் செய்யும் சேவை, குடியுரிமை தொடர்பான சேவைகள் மட்டுப்படுத்தவகையில் இடம்பெறவுள்ளதுடன் ஒரு நாளில் கடவுச்சீட்டை வழங்கும் சேவை முற்றாக நிறுத்தப்படும்.
மேலும் அலுவலகத்தை இடமாற்றம் செய்யப்படவுள்ளமையினால் நாளைமறுநாள் 26ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) கொழும்பு 10இல் அமைந்துள்ள பிரதான அலுவலகம், கண்டி, மாத்தறை, வவுனியா ஆகிய பிரதேசங்களிலுள்ள உள்ள அலுவலகங்களில் மக்கள் சேவை இடம்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, பம்பலபிட்டிய, புகையிரத நிலைய வீதியில் இருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் 2006ஆம் ஆண்டு கொழும்பு 10, ராஜகருணா மாவத்தைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்