குறுகிய கால பயணங்களை மேற்கொண்டு, வெளிநாடுகளுக்கு சென்ற சுமார் 3,000 பேர் அந்தந்த நாடுகளில் சிக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர்களுக்கு அந்தத் தெரிவுகள் எதுவும் இல்லை எனினும், அவர்களும் நாட்டிற்கு மீளத் திரும்பி வர வேண்டும். ஆதலால், அநேகமாக தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களை பயன்படுத்தும் வகையில், சாத்தியமான அளவிற்கு தற்போதைய செயற்பாடுகளுக்குள் அவர்களையும் உள்வாங்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.