
குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று சுகயீனமுற்று இலங்கை திரும்பிய பெண்ணொருவருடைய சிறுநீரகமொன்று அகற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையான சுகயீனத்துக்குள்ளான குறித்த பெண் குவைத் மருத்துவமனையில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றுள்ளார். புலத்சிங்கள, மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான அவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவருடைய ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இப்பெண்ணும் அவருடைய கணவரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். நரம்புகள் இயங்காமை நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணுடைய இரு கால்களும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ லங்காதீப