குவைத்தில் இன்னல்கள் அனுபவித்த 52 பேர் நாடு திரும்பினர்

குவைத்தில் பணிப்பெண்களாக பணிபுரிய சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 52 இலங்கையர்கள் நேற்று (28) நாடு திரும்பினர்.

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான 230 இலக்க விமானத்தில் நேற்றுகாலை 6.35 மணிக்கு அவர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.

அவர்களில் அறுவர் குவைத்தில் இரு வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்கள் என்றும் ஏனையோர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே அந்நாட்டில் பணியாற்றினர் என்றும் அவர்கள் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவரகள் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

பணிபுரிந்த காலப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த குறித்த பெண்கள் அவ்வீடுகளில் இருந்து தப்பி, அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையிலேயே தற்போது மீள நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் 44 பேருக்கு குவைத் அரசாங்கம் வழங்கியிருந்த தற்காலிக விமான கடவுச்சீட்டை கொண்டே நாடு திரும்பினர் என்றும் பணியகம் தெரிவித்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435