நாடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் தங்கியிருந்த 181 இலங்கையர்கள் இன்று (25) காலை 5.50 மணியளவில் விசேட விமானம் மூலமாக இலங்கையை வந்தடைந்தனர்.
ஶ்ரீலங்கள் விமான சேவையின் யு.எல் – 1206 இலக்க விமானத்தினூடாக மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை அப்பயணிகள் வந்தடைந்தனர்.
அழைத்து வரப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களால் கொண்டு வரப்பட்ட பொருட்கள் விமான நிலையத்தினுல் நுழைய முன்னர் இலங்கை விமானப் படையினரால் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. அடுத்ததாக அவர்களுடைய உடல் வெப்பநிலை கணிக்கப்பட்டு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனையை விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு மேற்கொண்டது.
தொடர்ந்து குறித்த பயணிகள் தனிமைப்படுத்தலுக்காக உரிய நிலையத்திற்கு இலங்கை இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டனர்.
ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இரண்டாவது குழு இதுவாகும். கடந்த 22ம் திகதி இரவு 10.54 ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினூடாக 261 இலங்கையர்கள் ரஷ்யாவில் இருந்து அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று (24) பங்களாதேஷில் தங்கியிருந்த 276 இலங்கையர்கள் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் யு.எல் – 1423 விமானத்தினூடாக அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம் – லங்காதீப/ வேலைத்தளம்