குவைத் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (ஜூலை 23) அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளும் குவைத் குடிமக்கள் மற்றும் குவைத் வாழ் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைகளை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது.
குவைத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்க இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்படும் மருத்துவ வசதிகள் அனைத்தும் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில், பி.சி.ஆர் சோதனைகளை செய்வதில் எந்த வித விலை மோசடியையும் செய்ய முடியாது எனவும், அதனை கட்டுப்படுத்த அமைச்சகம் விழிப்புடன் உள்ளது என்றும், இந்த வசதிகள் நாடு முழுவதும் ஒரு நிலையான விகிதத்தில் சோதனைகளை வழங்குவதை உறுதிசெய்கின்றன,
இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் குறைந்த செலவாகும், என்று கூறப்பட்டுள்ளது . தற்போது நிலவும் சூழ்நிலையினை பயன்படுத்தி விலையை உயர்த்துவது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவர்களின் மீது அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
நன்றி : குவைத் தமிழ் சோசியல் மீடியா