குவைத்தில் உள்ள பணியாளர்களுக்கு அரசாங்கத்தின் புதிய அறிவித்தல்

கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் குவைத்தில் உள்ள இலங்கை பணியாளர்கள் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை மீள அழைத்து வருவதில் முன்னுரிமையளிப்பதற்கான அமைச்சரவைத் தீர்மானம் குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க விளக்கமளித்துள்ளார்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் பங்கேற்ற வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதன்போது குவைத்தில் உள்ள இலங்கை பணியாளர்கள் குறித்து விளக்கமளித்து அவர்,

குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் உள்ளதுடன், அந்தப் பொது மன்னிப்பை இழந்தால் அங்குள்ள இலங்கை பணியாளர்கள் வெளியே வருவதற்கும், சட்டப்பூர்வமாக ஒருநாள் அங்கே மீளத் திரும்புவதற்கும் அதிக சிரமம் ஏற்படும் என்ற வெளிநாட்டு ஊழியர்கள் தரப்பினரின் கவலை குறித்து நாங்கள் அறிவோம்.

இந்த நேரத்தில் குவைத் அரசாங்கம் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்வந்துள்ளது. உண்மையில், கடந்த அமைச்சரவையில் அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், குறித்த பொது மன்னிப்புச் சலுகையை இலங்கை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு செயன்முறை குறித்து கலந்துரையாடி, குவைத் பிரதிநிதிகளுடன் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் ஈடுபடப் போகின்றார்.

நாங்கள் இந்த செயன்முறையைத் தொடங்குவோம். எனினும் இந்தக் கட்டத்தில் நாட்டிற்கு வர விரும்பும் அனைவரையும் அழைத்து வர முடியாது என்பது தொடர்பில் குவைத் அரசாங்கம் மிகுந்த விழிப்புடன் உள்ளது.

எனவே, நாங்கள் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது குறித்து சில பேச்சுவார்த்தைகளை இரு அரசாங்கங்களுக்கிடையில் நடத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435