குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 இலங்கையர்கள் நேற்று (14) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் வழிகாட்டலில் இவ்விலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 4 – 6 வருடங்கள் வரை குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சேவை ஒப்பந்தத்திற்கு மாறாக பலவருடங்கள் தங்கியிருந்த குறித்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு குவைத் சென்ற அமைச்சர் அத்துகோரள சட்டவிரோதமாக குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையரை உடனடியாக நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்