குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த 30 பணியாளர்கள் இன்று அதிகாலை நாடுதிரும்பினர்.
இவ்வாறு நாடுதிரும்பியவர்களுள் பலர், குவைத் அரசாங்கத்தின் தங்குமிடங்களில் தங்கியிருந்து பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திட்டமிட்ட குழுவொன்றினரால் குறித்த இலங்கையர்களின் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, வேறு இடமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் வீதியில் கைவிடப்பட்டு சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவைத் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ள அவர்கள், தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, குவைத்தில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்தின் தலையீட்டுடன், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.