குவைத்தில் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு திரும்ப வாய்ப்புள்ளது என்று குவைத் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குவைத் சுகாதாரத்துறை வழங்கும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 8 இறப்புகள் பதிவாகியுள்ளது.. மேலும் அவசர சிகிச்சை பிரிவில் 90 வழக்குகளில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 125 வழக்குகளாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பொது மக்கள் சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமூக தூரத்தை கடைபிடிக்காத காரணத்தால் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாகியுள்ளது என சுகாதாரத்துறை ஆதாரங்கள் தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் வழங்கிய முடிவுகளின் அடிப்படையில் குவைத் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் திட்டத்தின் ஐந்தாவது கட்டத்திற்கு மாற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை மற்றும் 34 நாடுகளுக்கு நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது.
பருவகால காய்ச்சல் (Flu Virus) தொடங்குவது சுகாதார அதிகாரிகளுக்கு அறிகுறிகளைக் கண்டறிந்து மருந்துகளை வழங்குவது ஒரு சவாலாக இருக்கும் என்றும், ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களிடையே கூட்டங்கள் கூடுவதால், வைரஸ்கள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கு இந்த கூட்டங்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன என்று வட்டாரங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஒத்துழை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.