ஆஸ்துமா மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர காலங்களில் தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என குவைத் எச்சரித்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பிரச்சினை நிலவியுள்ள நிலையில், சுகாதாரத்துறை வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பிரச்சினை ஒருபுறமிருக்க எதிர்வரும் நாட்களில் குவைத் நாடு காலநிலை மாற்றத்தை நோக்கி நகரும்போது (குளிர் காலம்) ஆஸ்துமா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரிக்க காலநிலை வழிவகுக்கும் .மேலும் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவிவருகிறது.
முக்கியமாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் மூச்சடைப்பு நிவாரணி (Bronchodilator) எப்போதும் கைவசம் வைக்கப்பட வேண்டும் என்றும் அவசர காலங்களில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியது.
நோய் மோசமடைந்தால், அருகிலுள்ள சுகாதார மையத்தில் உடனடியாக சிகிச்சை பெறவும், அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.