குவைத் புலம்பெயர் இலங்கையரின் பாதுகாப்புக்காக

குவைத்தில் போதை பொருள் பாவனையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கங்கள் தெரிவித்துள்ளன.

குவைத் சுகாதார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 70,000 இற்கும் அதிகமாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இத்தொகையானது கடந்த வருடம் போதை பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை விடவும் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் ஹானி சக்கரியா தெரிவித்துள்ளார்.

குவைத்தில் மேற்கொண்ட பல்வேறு சுற்றிவளைப்புக்களில் இலங்கையர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததமை கண்டறியப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டு சட்டத்துக்கமைய போதை பொருள் பெறுதல், பயன்படுத்துதல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல் என்பன கடுந்தண்டனைக்குரிய குற்றமாகும். குவைத்தில் சிறை தண்டனை அனுபவிக்கும் இலங்கையர்களின் 80 வீதமானவர்கள் போதை பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புபட்டவர்களாவார்.

சிலர் அறியாமை காரணமாக போதை பொருள் தொடர்பான தண்டனைகளில் சிக்கியுள்ளதுடன் சிலர் நேரடியாகவே குறித்த குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று வருகின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கமைய 7500 பேர் வரை போதை பொருள் தடுப்புக்காக நிறுவப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் உள்நாட்டவர்களும் வௌிநாட்டு தொழிலாளர்களும் உள்ளனர்.

அதனால் தொழில் நாடி வௌிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் சட்ட விரோத போதை பொருள நடவடிக்கைகளில் ஈடுபடாது பாதுகாப்பாக நாடு திரும்புவதில் அக்கறை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435