குவைத்தில் பணியாற்றும் பயிற்சி பெறாத வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம் குறைவடைதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அராப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்களின் பண வைப்பீடு மற்றும் வங்கி பணப்பரிமாற்றத்திற்கு 5 வீதம் வரி விதிக்க குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளமையே இதற்கு காரணம்.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுமார் 84.4 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் 5 வீத வரியினூடாக மத்திய கிழக்கு நாடுகளின் தேசிய உற்பத்தி வருமானத்திற்கு 0.3 வீத வருமானம் பெறப்படும். இதனூடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையான பணமாற்றத்திற்கான பங்களிப்பை இலகுவாக வழங்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இவ்வரிவிதிப்பின் பிரதிபலனாக நிர்வாக மற்றும் செயற்படுத்தலுக்கான செலவீனம் குறைவடைவதுடன் வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் நாடு குறித்து தவறான எண்ணம் தோன்றுவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பொருத்தமான தொழில்வாய்ப்பை எதிர்நோக்கும் பயிற்சி பெற்ற வெளிநாட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நாடி வர தயங்குவர் என்றும் பணப்பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் வரியானது வெளிநாட்டு தொழிலாளர்களின் தொழில் திருப்தியின்மைக்கு காரணமாக அமையும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.