கொரியாவில் தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் தங்களது விசா காலம் நிறைவடைந்த பின்னரும் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக கொரிய மனிதவள பிரிவு தெரிவித்துள்ளது.
கொரிய மனித வள பிரிவும் இலங்கை வெளிநாட்டு தொழிலாளர் பணியகமும் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
3800 க்கும் அதிகமானோர், அதாவது கொரியாவில் பணிபுரிபவர்களில் 17% க்கும் அதிகமானோர் இவ்வாறு தங்கி இருக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் இது தொடர்பில்
தெளிவு படுத்துகின்றபோதும் பிரதிபலன் கிடைக்கவில்லை.
இதன்மூலம் கொரியாவில் இலங்கைக்கு கிடைக்கும் தொழில் கோட்டாவில் சிக்கல் நிலை உருவாகும் என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது