கொரிய மொழி பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி!

மதிப்பீட்டினூடாக புள்ளி வழங்கல் முறையின் (EPS-TOPIK System) கீழ் நடத்தப்படும் முதலாவது கொரிய மொழி திறமைக்காண் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் , இரண்டாம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பில் இஸிபத்தன கல்லூரி, அசோக்கா வித்தியாலயம், றோயல் கல்லூரி, மற்றும் தர்ஷடன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரிகள் தமது மத்திய நிலையம் எதுவென்பதை www.slbfe.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும். பேச்சு மற்றும் எழுத்து மொழி திறமைகளை கண்டறியும் வகையில் நடத்தப்படும் இப்பரீட்சைக்காக 22353 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மீன்பிடித்துறை தொடர்பான பரீட்சையில் 3776 பேர் தோற்றியுள்ளனர். இப்பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வௌியிடப்படவுள்ளது.

பரீட்சையில் தோற்றவுள்ளகள் அன்றைய தினம் பரீட்சை அனுமதிப்பத்திரத்டன் கடவுச்சீட்டையும் கொண்டுவருவது அவசியம் என்பதுடன் முதல் கட்ட பரீட்சை 10.00 மணிக்கும் இரண்டாவது கட்டம் 2.00 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது.

கொரிய தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சு மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய புள்ளியடிப்படையில் தொழிலாளர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பரீட்சையில் மாத்திரமன்றி அனுபவத்திற்கும் புள்ளி சேர்க்கப்படவுள்ளதுடன் தொழிலில் குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களும் தொழில்வாய்ப்பை பெறும் வாய்ப்பு காணப்படுகிறது.

இம்முறை உற்பத்திதுறை சார் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே பரீட்சை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435