
இவ்வாண்டு நடத்தப்பட்ட கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் இன்று (07) வெளியாகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், பரீட்சை தினம், நேரம், இடம் போன்றவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (www.slbfe.lk) என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளுமாறும் பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.