கொரோனா பரவலால் இதுவரை சுமார் 9,000 இலங்கையர்கள் வேலையிழப்பு! – பணியகம்

கொவிட் 19 பரவல் காரணமாக 8,000 முதல் 9,000 வரையிலான இலங்கையர்கள் வௌிநாடுகளில் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் இருந்த இலங்கை  பணியாளர்களில் இதுவரையில் சுமார் 11,000 முதல் 12,000 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என இலங்கை வௌிநாட்டுப் பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தனிய தெரிவித்தார்.

எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

52,000 வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கை திரும்புவதற்கு முன்னதாக விண்ணப்பித்திருந்தனர்.

இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் மையங்களின் கொள்ளளவுக்கு ஏற்ற வகையிலேயே வெளிநாடுகளில் இருந்து  இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சும், தனிமைப்படுத்தல் பிரிவும் இணைந்து தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இதே நேரத்தில் இலங்கையர்களை வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் பணிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொள்கின்றது.

எவ்வளவு பயணிகளை விமானத்தில் உள்வாங்க வேண்டும் என்பதை தூதரக காரியாலயங்கள் தீர்மானிக்கின்றன. எனவே இந்த விடயத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு உதவி வழங்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் அவசியமாயின் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரக காரியாலயங்களை தொடர்பு கொள்ள முடியும். அதுமாத்திரமன்றி இலங்கையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய உடனடி அழைப்பு இலக்கத்திற்கும் அவர்கள் தொடர்பை ஏற்படுத்தமுடியும்.

அவ்வாறானவர்களுக்கு வேறு வேறு தொழில்களை பெற்றுக் கொடுப்பதற்கும், வேறு தொழில் இடங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பணியானது கட்டார் நாட்டில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனை தவிர்த்து தொழில் ஒப்பந்த காலம் நிறைவடைந்தவர்கள்  நாடு திரும்ப வேண்டியவர்களாக உள்ளனர். மேற்கொள்ளப்படும் விமான சேவைகளின் அடிப்படையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் மீண்டும் தொழில் வாய்ப்புக்கு செல்ல வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள  இலங்கை தூதரக காரியங்களுக்கு கிடைக்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தநிலையில், இலங்கையில் இருந்து தொழிலாளர்களை பெற்றுக்கொள்ளும் நாடுகள் அந்த நாடுகளுக்கு மீண்டும் தொழில் வாய்ப்புக்காக பணியாளர்களை அழைப்பதற்கான விசா அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க தூதரக காரியங்களுக்கு இதுவரையில் ஆலோசனை வழங்கவில்லை.

அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயத்திற்கு இது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும்.

அவ்வாறான ஆலோசனை வழங்கப்பட்டால் மாத்திரமே இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை விநியோகிக்க முடியும்.  இலங்கையர்களை  வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதற்கு குறிப்பிடத்தக்க அளவு காலம் நாம் பார்க்கவேண்டும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

விசேடமாக வளைகுடா நாடுகளை எடுத்துக்கொண்டால் அங்கு கொரோனா வைரஸ் தொற்று நிலை அதிகளவில் காணப்பட்டாலும், அந்த நாடுகளில் கொரோனா தொற்று உறுதியான  இலங்கையர்களின் எண்ணிக்கை 2,000 ஐ விடவும் அதிகரிக்கவில்லை. கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் இதுரையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள்,  44 பேர் ஆண்களுமாவர்.

இவ்வாறான பின்னணியில் தான் வெளிநாடுகளில் தொழிலுக்கு சென்ற  இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435