சரக்கு ரயில் மோதியதில் 16 புலம்பெயர் தொழிலாளர் பலி

இந்தியாவில் சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் 16 தொழிலாளர்கள் சரக்கு ரயிலில் மோதி பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் முடக்க நிலையின் காரணமாக சொந்த மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் ஏறும் நோக்கத்துடன் அருகிலுள்ள ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் தண்டவாளத்தில் படுத்துறங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் ஏறியதில், தொழிலாளர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவே சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், முடக்க நிலையால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியால் தவிப்பவர்களுக்கு உதவும் வகையில், கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த சிறப்பு ரயில்களில் ஒன்றில், சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என்ற திட்டத்தில் இருந்தபோதே இந்த தொழிலாளர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் நல்ல வருமானத்தை தரும் வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கத்தில் பெருமளவில் நகர்ப்புற பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

மூலம் – பிபிஸி தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435