கொரோனா தொற்றில் இருந்து நாட்டை பாதுகாப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் வதந்திகளை பரப்பி வருவோரை அடையாளம் காண்பதற்காக விசேட படையணி களத்தில் இறங்கியுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தேசிய அவசரநிலை, பேரிடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபையின் (National Emergency, Crisis and Disaster Management Authority – NCEMA) பேச்சாளர் டொக்டர் சய்ப் அல் தெஹாரி கருத்து தெரிவிக்கையில், அமீரகத்தின் ஒரு பகுதிக்கு ஒன்று என்றவகையில் ஒன்று என்றவகையில் ஏழு ஆய்வுக் குழுக்களை அமைப்பதன் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு தனித்துவமான கண்காணிப்பு மற்றும் ஆய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“உள்ளூர் மட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாடு மற்றும் ஆய்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காத அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.