கௌரவமான வௌிநாட்டு தொழிலுக்கு பெண்களை அனுப்புதே நோக்கம்

கௌரவமான புலம்பெயர் தொழிலுக்கு பெண்களை அனுப்புவதே எமது நோக்கம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று ஹாலியல வௌிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் உள்ள பெரும்பாலான பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர். எம்நாட்டுப் பெண்களை வௌிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்பி வைப்பதற்கு நான் தனிப்பட்ட ரீதியாக எதிர்க்கிறேன். எனவே அதிக சம்பளத்திற்கு கௌரவமான தொழிலிற்கு பெண்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.

எமது நாட்டுப் பெண்கள் பணிப்பெண்களாக பணியாற்றி அனுப்பும் பணத்தில இன்று சிலர் சுகம் அனுபவிக்கிறார்கள். எனவே வௌிநாடுகளுக்கு செல்லும் வேலைவாய்ப்பை நாடி செல்லும் பெண்களுக்கு வழங்கும் பயிற்சியில் சிறந்த மொழிப்பயிற்சி மற்றும் செயன்முறை பயிற்சிகளை வழங்கவேண்டும்.

கடந்த காலங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் விடயத்தில் அநீதி அழைக்கப்பட்டுள்ளது. அதனை சரிப்படுத்துவது எனது கடமை. நேர்முகத்தேர்விற்கு இளைஞர் யுவதிகளை அனுப்பி வைப்பதே என்னால் செய்யக்கூடியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435