க.பொ.த சாதாரண தரத்துடன் ஜேர்மனி கப்பலில் வேலைவாய்ப்பு

க.பொ. த சாதாரண தர பரீட்யைில் தோற்றிய மாணவ மாணவிகளுக்கு வௌிநாட்டு கப்பல்களில் வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுப்பதற்கு வின்ஸ்டோன் நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.

நுகேகொட, ஸ்டென்லி திலகரத்ன மாவத்தையில் அமைந்துள்ள இந்நிறுவனமானது, உணவு பரிமாறல், சமையற்காரர் மற்றும் பராமரிப்பாளர் போன்ற துறைகளில் ஜேர்மனியில் இயங்கும் பயணிகள் கப்பலில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கிறது.

குறித்த கப்பலுக்கு பயிற்றப்பட்ட ஊழியர்களை வழங்குவதற்கான அனுமதி பெற்ற இலங்கை நிறுவனமான வின்ஸ்டோன் நிறுவனம், 19- 27 வயது வரையான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கிறது.

ஆறு மாத பயிற்சியின் பின்னர், எவ்வித கட்டணமும் அறவிடாமல் இவ்வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் மாதாந்தம் சுமார் ஒரு இலட்சம் வரையான சம்பளமும் வருடத்திற்கு இரு மாத விடுமுறையும் வழங்கப்படும்.

ஜேர்மனி பயணிகள் கப்பல்களில் மட்டுமன்றி, அவுஸ்திரேலியா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்களிலும் குறித்த நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்கள் இணைக்கப்படுகின்றனர். சலுகை அடிப்படையில் பயிற்சிகளை இந்நிறுவனத்தில் கற்க முடியும். சர்வதேச அங்கீகாரம் மிக்க சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் தமது நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச தொழில்வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் நிறுவன பணிப்பாளர் ஜகத் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435