
சட்டவிரோத வீசாவை பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலிக்கு பயணிக்க முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானநிலையத்தில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் பகுதியில் குறித்த வீசாவை சமர்பித்தமையை அடுத்து ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மூலம் : சூரியன் எப். எம் செய்திகள்