சட்டவிரோதமாக கட்டாரில் தங்கியிருப்போருக்கு நாடு திரும்ப வாய்ப்பு

சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் தண்டனை வழங்காமல் சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்புவதற்கான பொது மன்னிப்பு காலமொன்றை கட்டார் அரசாங்கம் வழங்கியுள்ளது.

அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை இப்பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது என்று கட்டார் உள்ளக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் நாடு திரும்புவதற்கு விண்ணப்பிப்போருக்கான அனுசரணை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் விண்ணப்பிக்கும் போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது கடவுச்சீட்டு செல்லுபடியற்றதாயின் உயர்ஸ்தானிகராலயத்தில் வழங்கப்பட்ட கடிதம் அல்லது அடையாள அட்டையின் பிரதி அல்லது அந்நாட்டுக்கு நுழைய பயன்படுத்தப்பட்ட வீஸாவின் பிரதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்விண்ணப்பங்கள் குறித்த மூன்று மாதக்காலத்தில் வியாழக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று உள்ளக அமைச்சின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435