
சவுதியின் சவுதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமான (டிரோன்) தாக்குதலால் பெரும் தீ உண்டாகியுள்ளது.
ஈரான் ஆதரவளிக்கும், ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (14) காலை நான்கு மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
அப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சவுதி அரசு ஊடகம் தெரிவிக்கிறது.