சட்ட விரோத பணியாளருக்கு பொது மன்னிப்பு- லெபனான்

லெபனானில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியருக்கும் சுமார் 7000 இலங்கையர்கர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

சுமார் ஒரு வருட காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இப்பொது மன்னிப்பு காலத்தை வழங்க லெபனான் அரசாங்கம் இணங்கியுள்ளது.

குறிப்பாக சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமாக உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 60 பேருக்கு எவ்வித அபராதமும் இன்றி, நாடு திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனையோருக்கு, 50 வீத அபராதம் வழங்குமாறும் அந்நாட்டு அரசாங்கம் பணித்துள்ளது. பொது மன்னிப்புக்கான வாய்ப்பை வழங்கிய லெபனான் அதிகாரிகளுக்கும் அதற்காக பாடுபட்ட இலங்கை அதிகாரிகளுக்கும் பெய்ருட்டில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

இவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி லெபனானில் தங்கியுள்ள இலங்கையர்களில் 90 வீதமானவர்கள் வீட்டுப்பணிப்பெண்களாக சென்றவர்கள் ஆவர். புதிய நடைமுறைக்கமைய லெபனானில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 400 இலங்கையர்கள் தம்மை பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் 55 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான அனுமதியை அந்நாட்டு பொது பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இம்மாதம் மட்டும் இதுவரை 39 இலங்கையர் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான உதவிகளை லெபானனுக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435