வெளிநாட்டுக்கு பணிக்கு செல்லும் இலங்கை பணிப்பெண்களின் சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும் பணிப் பெண்களின் சமுர்த்தி கொடுப்பனவு நிறுப்படுகிறது. வறுமை நிலைமையின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் பணிப்பெண்கள் அங்கு குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகாலம் முழுமையாக பணிபுரிவதில்லை. சிலர் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே திரும்பிவிடுகின்றனர்.
இந்த நிலையில், அவர்களின் சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்படுகிறது. எனினும், நாடு திரும்பிய பின்னர் அவர்கள் மீண்டும் புதிய சமுர்த்தி பயனாளிகளாக தம்மை இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இல்லை.
எனவே, வெளிநாடு செல்லும் பணிப்பெண்களிளுக்கான சமுர்த்தி கொடுப்பனவு நிறுத்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக வெளிநாட்டு வேலைவாயப்புத்துறை பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.