சமூக வலைத்தளங்களினூடாக வழங்கப்படும் வீசா மற்றும் சேவைகள் பயன்படுத்துவது ஒமான் சட்டத்தை மீறுவதான செயல் என ஓமான் மனித வள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமான் நாட்டில் மற்றும் நாட்டுக்கு வௌியே சுமார் 7 நிறுவனங்கள் முகப்புத்தம் மற்றும் ஏனைய சமூக வலைத்தள அப்களை பயன்படுத்தி வீசா வழங்கல் மற்றும் சேவைகள் வழங்குவது தொடர்பில் விளம்பரப்படுத்தி வருகின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் அந்நாட்டு சட்டத்தை மீறுவோராக கருதப்படுவர் என்று ஓமான் மனித வள அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இச்செயற்பாடானது சந்தேகம் ஏற்படாத வண்ணம் பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சு அவசியமான தகவல்களை அமைச்சினால் வௌியிடப்படும் செய்திகளை மின்னஞ்சலூடாக பெறும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அதனை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் 30 ஓமான் ரியால் வழங்கி வீசா மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக 100 தொடக்கம் 350 வரையான ஓமான் ரியால்களை வழங்குகின்றனர் என்றும் இது தொடர்பில் ரோயல் ஓமான் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்படில் அவர்கள் நாட்டின் சட்டத்தை மீறியதனால் குற்றவாளிகளாக அடையாளங்காணப்படுவர என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
வேலைத்தளம்