
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இவ்வாண்டு இறுதியில் கட்டார் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டில் பணிபுரியும் இலங்கையரின் நலன்புரி தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளார் என்று கட்டாருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டப்ளியு.எம். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விஜயத்தின் போது இரு தரப்பினருக்கிடையிலான நீண்டநாள் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட கட்டார் இளவரசர் ஷீக் தமமிம் பின் ஹமாட் தானி யுடனான (Sheikh Tamim bin Hamad al-Thani) கலந்துரையாடலின் போது கட்டார் வாழ் புலம்பெயர் தொழிலாளரின் நலன்புரி தொடர்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் பிரதிபலனாக இவ்வருட இறுதியில் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்தப்படவுள்ளது என்று கட்டாருக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்
இவ்விஜயத்தின் போது இரதரப்பினர்களுக்கிடையில் விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் ஊடகம் ஆகிய மூன்று துறைகள் தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்