பல்வேறு சமூக வலைத்தளங்களினூடாக சமூக ஒழுக்கத்தை சீர்கெடுக்கும் வகையிலான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த அராபிய பெண்ணொருவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 250,000 திர்ஹம் அபராதமும் விதித்து தீர்ப்பிட்டுள்ளது அபுதாபி உச்ச நீதிமன்றம்.
டிவிட்டர், ஸ்னெப்சட் மற்றும் இண்ஸ்டர்க்ரேம் ஆகிய சமூக வலைத்தளங்களில் ‘தமானி’ என்ற பெயரில் கணக்குகளை ஆரம்பித்து மோசமான வீடியோக்களை இப்பெண் பதிவேற்றியுள்ளார்.
அபுதாபி சைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த பெண் தண்டனை காலம் முடிந்த பின்னர் நாடு கடத்தப்படவுள்ளார். குறித்த பெண் அவ்வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பயன்படுத்திய கணனி உட்பட இலத்திரனியல் சாதனங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.