சமூக வலைத்தளங்களை துஷ்பிரயோகம் செய்வோருக்கான சட்ட நடவடிக்கை

சமூக வலைத்தளங்களை தவறான முறையில் பயன்படுத்துவோருக்கெதிரான கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக கட்டார் அரசு அறிவித்துள்ளது.

என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதற்கமைய, முகப்புத்தகம் ( பேஸ்புக்) வைபர், வட்ஸ்ஸப், ட்விட்டர், மெஸென்ஜர், இமோ மற்றும் இண்ட்ரக்கிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிந்தோ தெரியாமலே செய்யும் தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேசிய அல்லது சர்வதேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவித்தல் மற்றும் நாட்டின் தேசி பாதுகாப்புக்கு பாதிப்பை விளைவிக்கும் வகையிலான வதந்திகளை பரப்புதல், பொய்யான தகவல்களை வௌியிடுதல், உருவாக்குதல் மற்றும் அவ்வாற சமூக வளைத்தள பங்கங்களை இயக்குதல் போன்ற குற்றங்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சம் 500,000 கட்டார் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் அதன் பாதிப்பைக் கவனத்திற்கொண்டு இரண்டு தண்டனைகளும் வழங்கப்படும்.

அதேபோல், சமூக ஊடகங்களினூடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் தகவல்களை பரப்புபவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது 250,000 கட்டார் ரியால் அபராதமும் விதிக்கப்படும்.

சமூக விழுமியங்கள் அல்லது நம்பிக்கைகளை துஷ்பிரயோகப்படுத்தும் வகையில் மற்றும் தனிநபர், நபர்கள், குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான தகவல்கள், புகைப்படங்கள், வீடியோ, ஓடியோ போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு 100,000 கட்டார் ரியால் அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்தகவல்கள் உண்மையானவையாக இருந்தாலும் இத்தண்டனை விதிக்கப்படும்.

யாராவது ஒரு நபருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்ப உபகரணங்களை பயன்டுத்தி தகவல்கள் வௌியிடும் நபர்களுக்கு எதிராக சிறைத்தண்டனையும் 100,000 கட்டார் ரியாலும் அபராதமாக விதிக்கப்படும்.

கட்டாரில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் இது தொடர்பில் மிகவும் அவதான இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435