சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தரங்கள் உள்ளடக்கப்பட்டதாக சர்வதேச அங்கீகாரம் மிக்க கடவுச்சீட்டை அடுத்த ஆண்டு தொடக்கம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கமைய கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பப்படிவங்களை வயது பேதமின்றி அனைவரும் “K RV 35A” வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும். 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் கைரேகை அடையாளங்கள் பிரதான மற்றும் கிளை அலுவலகங்களினால் பெறப்படுகிறது. பெற்றோரின் கடவுச்சீட்டில் பிள்ளைகள் செல்வது இனி அனுமதியளிக்கப்படாது. அவர்களுக்கும் தனியான கடவுச்சீட்டு பெறுவது கட்டாயமாக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் அவசர சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
புதிய கடவுச்சீட்டு தொடர்பான மேலதிக தகவல்களை 1962 என்ற உடனடி இலக்கத்திற்கு அல்லது 011 532 9200 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்