சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 09 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கே கொவிட்-19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,724 ஆக அதிகரித்துள்ளது.
2,035குணமடைந்துள்ள நிலையில், 678 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.