வீஸா இன்றி தென்கொரியாவில் தங்கி பணியாற்றும் இலங்கையர் நாடு திரும்புவதற்காக செப்டெம்பர் மாதம்வரை வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் மேலும் இரு மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்த சென்ற தொழிலாளர்கள் வீஸா காலம் முடிந்த பின்னரும் அந்நாட்டில் தங்கியுப்பது தொடர்பில் தெரியவந்ததையடுத்து குறித்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்ட போதிலும் நாடு திரும்பாதவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் வழங்கப்பட்டுள்ள காலத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வீஸா இன்றி தங்கியிருப்போர் எவ்வித தண்டனையுமின்றி சொந்த நாட்டுக்கு திரும்ப முடியும்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை அந்நாட்டில் உள்ள தேகு ஶ்ரீலங்காராம விகாரையுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைத்தளம்